மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானாவில் ராகுல் காந்தி! சாதிவாரி கணக்கெடுப்பு கூட்டத்தில் பங்கேற்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.

News image
Updated On :5 நவம்பர் 2024, 12:31 pm

DIN

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நாளை(புதன்கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. இது நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியுள்ளது.

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வல்லுநர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.