பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, அவர் பொய்யானவர்களின் தலைவர் என ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் - ஆர்ஜேடி, இடதுசாரி கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகின்றன. பாஜக அங்குள்ள மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று(நவ. 5) ஜார்க்கண்டில் கான்கே பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.
இதையும் படிக்க | திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!
அப்போது, 'சாதாரண குடிமக்களின் நலனைவிட பணக்காரர்களின் நலனுக்குத்தான் பிரதமர் மோடியும் அவரது அரசும் முன்னுரிமை அளிக்கிறது. அவர் பொய்யானவர்களின் தலைவர்.
ஏனெனில், பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம், கறுப்புப் பணத்தை ஒழிப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.
மற்றவர்கள் வைத்திருக்கும் நல்ல விஷயங்களை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை. அவர் 2 முக்கிய பிரமுகர்களையும் அமித் ஷாவையும் மட்டுமே கவனிக்கிறார். அமைச்சரவையில் யாரும் பேச முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே பேச முடியும், அமித்ஷா பேசுவார். எல்லா அதிகாரங்களும் அவரிடமே உள்ளன.
ஜார்க்கண்டின் கனிம வளங்களை பாஜக கொள்ளையடிக்க முயல்கிறது. அவர்களின் நோக்கம் மக்களின் நலன் அல்ல, ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்காக சேவை செய்வதாகும்.
ஹேமந்த் சோரனை யாராலும் ஆட்சியில் இருந்து நீக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக அவர் மீண்டும் பதவியேற்பார்' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பயத்தை உருவாக்கி மக்களைத் திசைதிருப்புகிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி!

திருச்சியில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமி

மார்ச் 11ல் என்டிஏ தேர்தல் பிரசார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

