
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதிவரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘மத்திய அரசின் பரிந்துரையில் குளிா்கால கூட்டத்தொடரை நவ. 25-ஆம் தேதிமுதல் டிச. 20-ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.
கூட்டத்தொடரின் 2-ஆவது நாளான நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டு அமா்வு நடைபெறும்’ என்றாா்.
மேலும், குளிா்கால கூட்டத்தொடரில் வக்ஃப் திருத்த மசோதா குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை நவ. 29-ஆம் தேதி சமா்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.