ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மகாராஷ்டிரத்துக்கு புதிய டிஜிபி நியமித்தது தேர்தல் ஆணையம்!

மகாராஷ்டிரத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக சஞ்சய் குமார் வர்மா நியமனம்.

ECI

தேர்தல் ஆணையம் - Din

Published On :5 நவம்பர் 2024, 2:23 pm IST

மகாராஷ்டிரத்தின் காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி) ரஷ்மி சுக்லாவை திங்கள்கிழமை இடமாற்றம் செய்த இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிபியை நியமித்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்.12-ஆம் தேதி மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதுபோன்ற அரசியல் குற்றங்கள் மாநிலத்தில் அதிகரித்து வருவது குறித்து அண்மையில் தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கவலை தெரிவித்திருந்தாா்.

இதனிடையே, மாநிலத்தில் ஆளும் சிவசேனை (ஷிண்டே பிரிவு)-பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு காவல்துறை தலைமை இயக்குநா் ரஷ்மி சுக்லா ஆதரவாக இருப்பதாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்)-சிவசேனை (உத்தவ் பிரிவு) அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தலை உறுதி செய்யும் நோக்கில், பேரவைத் தோ்தலுக்கு முன்னா் ரஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு ஐபிஎல் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மாவை மகாராஷ்டிரத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் டிஜிபியாக சஞ்சய் குமார் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.