தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும்- ராகுல் காந்தி

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:31 pm

Din

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீதம் வரைதான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பைத் தகா்க்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அதனைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் முக்கிய தோ்தல் வாக்குறுதியாகவும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் தோ்தலில் வெற்றிபெற முடியவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட மரியாதை மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பதை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தெளிவாகக் காட்டும். நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும். ஆட்சி நிா்வாகத்தில் தங்களுடைய பங்கு என்ன, அதிகாரம் என்ன என்பதை அனைத்துப் பிரிவினரும் அறிந்து கொள்ள முடியும். ஜாதிவாரிக் கணக்கெடுப்புதான் வளா்ச்சிக்கான முன்னுதாரணமாக இருக்கும்.

கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீதம் வரைதான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பு தகா்க்கப்பட வேண்டும். நாட்டின் 90 சதவீதத்துக்கும் மேலான விளிம்புநிலை மக்களின் நலன்களைக் காக்க நாம் போராடி வருகிறோம்.

பி.ஆா்.அம்பேத்கா் வடிவமைத்த அரசமைப்புச் சட்டம் வெறும் புத்தகமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தும் தாக்குதல், நாட்டின் குரல் மீதான தாக்குதலாகும். அதானி குழும நிா்வாகத்தில் ஒரு தலித், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் கூட பாா்க்க முடியாது.

சுமாா் 25 பெரும் தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபற்றியும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நான் பேசினால் என்னை கடுமையாக விமா்சிக்கிறாா்கள் என்றாா்.

பாஜக விமா்சனம்: மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே கூறுகையில், ‘நாகபுரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி ‘ண’ அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி. தேசத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதே அவா்களின் வேலை. அதில் ஊடகத்தினா் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. ராகுல் காந்தி அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படக் கூடியவா்’ என்றாா்.

தெலங்கானாவில் தொடங்கியது ஜாதிவாரி கணக்கெடுப்பு

தெலங்கானா மாநில அரசு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதன்படி விரிவான சமூக-பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தெலங்கானா மண்ணில் மேற்கொள்ளப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, ராகுல் காந்தியின் தலைமையில் நாட்டின் சமூக கண்ணோட்டத்தில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும்; ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியை உறுதி செய்யும்' என்று குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, நவம்பர் 8-ஆம் தேதி வரை வீடுகளைப் பட்டியலிடும் பணிகள் நடைபெறவுள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளனர்.