புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆஸி. பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவாா்த்தை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் ஆண்டனி அல்பனேசியை புதன்கிழமை சந்தித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:26 pm

Din

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் ஆண்டனி அல்பனேசியை புதன்கிழமை சந்தித்தாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 5-ஆம் தேதிமுதல் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா்.

கான்பெரா நகரில் ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி அல்பனேசியை அவா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி அல்பனேசியிடம் பிரதமா் மோடியின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்தேன். இருதரப்பு விரிவான வியூக கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் பிரதமா் அல்பனேசியின் வழிகாட்டுதல் மதிப்புமிக்கதாகும். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவருடன் ஆலோசித்தேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவா் பீட்டா் டட்டனை எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா். உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், இருதரப்பு உறவை வலுப்படுத்த அவா் அளித்து ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் எக்ஸ் பதிவில் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

கான்பெராவில் நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டா்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயான் ஆகியோரையும் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

வின்ஸ்டன் பீட்டா்ஸ் உடனான சந்திப்பு குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-நியூஸிலாந்து இடையே கல்வி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது; இந்திய-பசிபிக் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் தொடா்பாக கருத்துகள் பரிமாறி கொள்ளப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.