நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்: வேட்பாளரின் வினோத வாக்குறுதி!

தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என்று வேட்பாளர் ஒருவர் வினோத வாக்குறுதி அளித்துள்ளார்.

ரஜேசாப் தேஸ்முக்

Published On :

தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வினோத வாக்குறுதி அளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக பிரசாரம் நடைபெற்றுவருகிறது.

மத்திய மகராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது சரத்பவார் அணியின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைப்பதாக வினோத வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த வாக்குறுதியை அளித்திருப்பவர் ரஜேசாப் தேஸ்முக். இவர் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பிரசாரத்தின் போது ஆண்களுக்கு திருமணம் செய்வதற்கு பெண் கிடைப்பதில்லை. அதற்கு தீர்வுகாண வழிசெய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் விவசாயத் துறை அமைச்சரான தனஞ்செய முண்டேவை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து ரஜேசாப் தேஸ்முக் பிரசாரத்தில் பேசுகையில், “வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைப்போம். திருமணத்திற்கு பெண் தேடும்போது மணமகனுக்கு வேலை இருக்கிறதா என்றுதான் மக்கள் முதலில் கேட்பார்கள்.

இந்த மாவட்டத்தில் விவசாயத் துறை அமைச்சரான தனஞ்செய முண்டேவுக்கே வேலையில்லாத போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்” என்றார்.

தனஞ்செய முண்டே வெற்றிபெற்றதில் இருந்து இதுவரை இந்தத் தொகுதியில் ஒரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. இதனால் வேலைவாய்ப்பில்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.