யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் கைது: 'தேர்தல் திருட்டுக்கான அப்பட்டமான முயற்சி' - கார்கே சாடல்

பிரதான் கைது செய்யப்பட்டுள்ளது "வாக்குத் திருட்டு மற்றும் தேர்தல் திருட்டுக்கான அப்பட்டமான முயற்சி" என்று கார்கே சாடியிருப்பது குறித்து...

Mallikarjun Kharge

மல்லிகார்ஜுன கார்கே - X

Published On :

புது தில்லி: நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மமதா பானர்ஜி செப். 18 ஆம் தேதி தனது ஆதரவைத் தெரிவித்திருந்த சில மணிநேரங்களில் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளது "வாக்குத் திருட்டு மற்றும் தேர்தல் திருட்டுக்கான அப்பட்டமான முயற்சி" என்று கார்கே சாடியுள்ளார்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் செப். 18 ஆம் தேதி முடக்கியது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மமதா பானர்ஜி தலைமையிலான அணிக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

இத்துடன், மமதா அணியின் சார்பில் நந்திகிராம் தொகுதியின் இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். முதல்வர் சுவேந்து அதிகாரியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மமதா பானர்ஜி வெள்ளிக்கிழமை (செப். 18) தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மமதா ஆதரவளித்த சில மணிநேரங்களில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்குக் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, மிலன் பிரதான் கைது செய்யப்பட்டது 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' எனவும், பாஜகவின் 'ஜனநாயகப் படுகொலை' எனவும் விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், பிரதானின் கைது நடவடிக்கை "வாக்குத் திருட்டு" மற்றும் "தேர்தல் திருட்டுக்கான அப்பட்டமான முயற்சி" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

Kharge claimed that Pradhan's arrest was "a brazen attempt at VOTE CHORI and CHUNAV CHORI".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.