மும்பையில் பேருந்து-லாரி மோதி விபத்து: 18 பேர் காயம்!
மும்பை-புனே விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியது..


மும்பையில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோபோலி அருகே மும்பை-புனே விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது தனியார் பேருந்து மோதியதில், 18 பயணிகள் காயமடைந்தனர், அவர்களில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோலாப்பூரில் இருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 பயணிகள் காயமடைந்தனர், அவர்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் நான்கு பெண்கள் உள்பட எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறினார்.
விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இந்த சம்பவம் குறித்து கோபோலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...