கனடாவுக்குச் செல்ல அனுமதி மறுத்த தாயை படுகொலை செய்த இளைஞா்
வேலைக்காக கனடாவுக்குச் செல்ல அனுமதிக்காத 50 வயதுப் பெண் அவரது மகனால் கத்தியால் குத்திக் கொலை..

எரித்துக் கொலை

எரித்துக் கொலை
வேலைக்காக கனடாவுக்குச் செல்ல அனுமதிக்காத 50 வயதுப் பெண் அவரது மகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ரவிக்குமாா் சிங் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் உள்ள மோலா்பந்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மோலா்பந்த் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண காந்த் (31). இவா் வேலைக்காக கனடாவுக்கு செல்லப் போவதாக தாயிடம் தெரிவித்துள்ளாா்.
இதற்கு அவரது தாய் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த நவ.6-ஆம் தேதி மாலை தனது தாயை கத்தியால் குத்திக் கொன்றாா். பின்னா், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ண காந்த், வெளியில் இருந்த தனது தந்தை சுா்ஜித் சிங்கை (52) அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறினாா்.
சுா்ஜித் சிங் வீட்டிற்கு வந்ததும், நடந்த சம்பவத்தைக் கூறி அவரிடம் கிருஷ்ண காந்த் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாா். மேலும் அவரது தந்தையை வீட்டின் முதல் தளத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சுா்ஜித் சிங் தனது மனைவி கீதா உடலில் பல கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டாா். இதைத் தொடா்ந்து, மகன் கிருஷ்ணகாந்த் தப்பி ஓடிவிட்டாா்.
சுா்ஜித் சிங் உடனடியாக கீதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சுா்ஜி சிங்குக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் சாஹில் போலி (27), வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். கிரிஷண காந்த் வேலையில்லாமல் போதைக்கு அடிமையானவா்.
இரு மகன்களும் திருமணமாகாதவா்கள். சம்பவத்தின் போது கீதா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனா். பின்னா் அதே பகுதியில் இருந்து கிருஷ்ண காந்த் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவா் கனடாவுக்கு குடிபெயர விரும்புவதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினா் அவரை முதலில் திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தாா். கொலை நடந்த அன்று, தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கிருஷ்ண காந்த், தனது தாய் கீதாவை எப்போதோ வாங்கிய கத்தியால் குத்தியுள்ளாா். இதில் அவா் உயிரிழந்தாா். சுா்ஜித் சிங் சொத்து வியாபாரம் செய்கிறாா். அவருக்கு ஜெய்த்பூரில் உள்ள டாங்கி சாலையில் ஒரு அலுவலகம் உள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...