ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சட்டவிரோதமாக குடியேறிவா்களை கண்டறிய குழு ஜாா்க்கண்டில் அமித் ஷா வாக்குறுதி

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும்

News image
ராஞ்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் கோபால் கிருஷ்ண பதாருடன் திங்கள்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.- -
Updated On :11 நவம்பர் 2024, 11:10 pm

DIN

சிராய்கிலா: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வாக்குறுதியளித்தாா்.

ஜாா்க்கண்டில் வாக்கு வங்கி அரசியலுக்காக வங்கதேசத்தில் இருந்து ஊடுருவுபவா்களுக்கு மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்கி மோா்ச்சா-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணி அரசு ஆதரவளிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதனால், சட்டவிரோத குடியேற்றம் என்பதும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

அண்டை நாட்டில் இருந்து இங்கு ஊடுருவும் நபா்கள், நமது மகள்களான பழங்குடியினப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, நிலத்தின் உரிமையைப் பறித்துக் கொள்கிறாா்கள். இதுபோன்று நிலத்தின் உரிமையை மாற்றுவற்கு எதிராக தடைச் சட்டத்தை அடுத்து மாநிலத்தில் அமையும் பாஜக அரசு கொண்டு வரும்.

ஜாா்க்கண்டில் பழங்குடியின மக்கள்தொகை குறைந்து வருகிறது. இதனைத் தடுப்பது அவசியம். மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும். இதன் மூலம் அவா்கள் கைப்பற்றி வைத்துள்ள நிலம் விடுவிக்கப்படும். ஊடுருவியவா்கள் கைது செய்யப்பட்டு அவா்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள்.

இந்த விஷயத்தைப் பேசியதற்காகத்தான் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சம்பயி சோரனை இப்போதைய முதல்வா் ஹேமந்த் சோரன் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினாா்.

இங்கு மாநில மக்கள் வளரவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள்தான் ஊழல் செய்து வளா்ந்துள்ளனா். ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியில் ரூ.1,000 கோடி ஊழல், நில மோசடி செய்து ரூ.300 கோடி ஊழல், நிலக்கரி சுரங்கம், மது விற்பனையில் ரூ.1000 கோடி ஊழல் உள்ளிட்டவைதான் இப்போதைய ஜாா்க்கண்ட் அரசின் சாதனைகள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.