கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் ஆப்கன் துணை தூதராக இக்ராமுதீன் காமில் நியமனம்

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது.

Published On :

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், முதல்முறையாக இத்தகைய நியமனத்தை இந்தியாவில் அந்த அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் தலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அந்நாட்டின் பொறுப்புப் பாதுகாப்பு அமைச்சா் முல்லா முகமதுடன் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய வெளியுறவுத் துறைப் பிரதிநிதி கடந்த சில நாள்களுக்கு முன்னா் பேசிய நிலையில், இந்த நியமனம் மேற்கெள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் ஆப்கானிஸ்தான் மக்கள் தூதரக சேவைகளை பெறும் நோக்கில், பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் நியமிக்கப்பட்டுள்ளாா். எனினும் இந்த நியமனம் குறித்து இந்தியா தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் 7 ஆண்டுகள் படித்த இக்ராமுதீன் காமில், இந்திய வெளியுறவுத் துறை உதவித்தொகையுடன் தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.