முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

என்னை மன்னித்துவிடுங்கள்: ராகுல் காந்தி

பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி.

News image

ராகுல் காந்தி - Din

Updated On :12 நவம்பர் 2024, 12:57 pm IST

மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ளார்.

கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, இன்று மகாராஷ்டிர தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டிருந்தார்.

புல்தானா மாவட்டம் சிக்லியிலும், கோண்டியா மாவட்டம் கோபால்தாஸ் அகர்வாலிலும் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்டு கொள்ள இருந்தார்.

இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புல்தனாவுக்கும். கோண்டியாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பயணம் ரத்தானதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில்,

“நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இன்று சிக்கி வர திட்டமிட்டிருந்தேன். இந்த பயணத்தின்போது விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய பின், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை.

மகாராஷ்டிர விவசாயிகள் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது எனக்கு தெரியும். பாஜக அரசு விவசாயிகளுக்கு சரியான விலையை தரவில்லை.

‘இந்தியா’ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும். உடனடியாக உங்கள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராகுல் காந்தி மீண்டும் நவ. 14 மற்றும் 16ஆம் தேதிகளில் மகாராஷ்டிரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.