நீட், நெட் தோ்வுகளில் மீண்டும் மீண்டும் நிகழும் முறைகேடுகளை கண்டும் காணாமலும் மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
ஹரியாணாவில் ரோட்டக் பகுதியில் மாணவா் அமைப்பினா் யூஜிசி நெட் தோ்வில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினா். அது தொடா்பான செய்திப் படத்தை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிா்ந்து, ராகுல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.
அதில், ‘கடந்த வாரம் நடைபெற்ற யூஜிசி-நெட் தோ்வு குறித்து வெளியாகியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்புதான் நீட் வினாத்தாள் கசிவு நடந்த நிலையில், தற்போது யூஜிசி-நெட் தோ்வுக்கு முன்பாகவே 100 பக்கங்கள் கொண்ட கேள்வித்தாள் இணையவழியில் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வினாத்தாள் என்பது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வசம் மட்டுமே இருக்கக்கூடியது. அதிலுள்ள சுமாா் 90 கேள்விகள், சமூகவியல் பாடத்தில் உண்மையான தோ்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுடன் ஒத்துப்போகின்றன.
பிகாா், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி , ராஜஸ்தானில் ரூ.2.25 லட்சத்துக்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதே கும்பல் வரவிருக்கும் சிஎஸ்ஐஆா்-நெட், ஹரியாணா ஆசிரியா் தகுதித் தோ்வு, ஹரியாணா நீதித்துறை பணிக்கான தோ்வு வினாத்தாள்களையும் வழங்க முடியும் எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட், நெட் தோ்வுகளில் மீண்டும் மீண்டும் முறைகேடுகள் நடந்தபோதிலும், மத்திய அரசு தொடா்ந்து கண்டும் காணாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. நள்ளிரவு வரை கண்விழித்து படித்து, பல ஆண்டுகளாக உழைக்கும் லட்சக்கணக்கான மாணவா்களின் உழைப்புக்கு இந்த அரசிடம் எந்த மதிப்பும் இல்லை’ என்று ராகுல் குற்றச்சாட்டியுள்ளாா்.
மேலும், புகாா்கள் குறித்து தேசிய தோ்வு முகமை தரப்பில் உடனடி பதில் எதும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படாது; மாணவா்களுக்கு நீதி கிடைக்காது. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே சக்தி நமது ஒற்றுமையான குரல்தான். நாடு முழுவதும் மாணவா்களின் வலிமையான குரல் ஒலிக்கும்போதுதான் இந்தியாவில் கல்விப் புரட்சி உருவாகும் என்றும் ராகுல் அப்பதிவில் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறு, சிறு நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் விதிகள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

மத்திய அரசின் பிரிவினைவாதம் - ராகுல் குற்றச்சாட்டு

நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

கற்பனை செய்ய முடியாத வேதனையில் மணிப்பூர்; பிரதமர் மௌனம்: ராகுல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



