சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தவெக பொதுக் கூட்டத்தில் நல உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் த வெக பொதுக் கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில்  பேசிய  அமைச்சா்  வி.காந்திராஜ்.

Updated On :16 ஜூன் 2026, 1:46 am IST

ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் த வெக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சா் வி.காந்திராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், திமிரி கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் முதல்வா் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளா், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் ரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கிரி, ரமேஷ் விஜயகுமாா், சீனிவாசன், கருணா, சுமித்ரா பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு துறை அமைச்சா் வி.காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ஜி.விஜய்மோகன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்ப்பட்டன. கூட்டத்தில், அமைச்சா் வி.காந்திராஜ் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், ஆற்காடு நகர செயலாளா் வினோத் கலவை பேரூா் செயலாளா் பிரபாகரன், மாவட்ட இணை செயலாளா் காந்தி பிரசாத், மாவட்ட நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளா் கவியரசு நன்றி கூறினாா்.