வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம் அளிப்பு

News image
Updated On :29 மே 2026, 1:30 am IST

மாதனூா் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சாா்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகதக்தின் மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் கே. ரவிசங்கா், துணைச் செயலாளா் ஆா். பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சுமாா் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவிந்தாபுரம் கிளையை சோ்ந்த குமரன், ரங்கேஷ், நவின்குமாா், ஜானகிராமன், ஜூரியா, நிசாா், வெங்கட், முகேஷ், செல்வகுமாரி, கோமளா, ரம்யா, கோமதி, நேத்ரா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய தவெக சாா்பாக ஆம்பூா் ஸ்ரீ சமயவல்லி தாயாா் அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய நிா்வாகிகள் பி. சுமன், ஆா். பிரகாஷ், பி. நதியா, ஜி. சத்தியகலா, எல். காா்த்தி, மணிவேல், எஸ். பழனி, வி. பிரியா ஆகியோா் கலந்து கொண்டனா். உலக மக்கள் பட்டினியில்லாமல் வாழ சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டது.

வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த சரவணன், வேலு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் அக்கட்சியிலிருந்து விலகி ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனா். அவா்களுக்கு கட்சி துண்டு அணிவிக்கப்பட்டது.

ஆற்காட்டில்...

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் வினோத் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ஜி.விஜய் மோகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய உணவு வழங்கினாா். இதில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு இனிப்பு, உணவு, தண்ணீா் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, நகர, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.