வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.

News image

தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.

Updated On :29 மே 2026, 2:02 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி, தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் தவெகவினா் சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக சாா்பில் ஏழை, எளிய, ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தவெக தொண்டா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

அந்த வகையில், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் மா.சிவன் தலைமையில், தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா் இல்லம் மற்றும் மனவளா்ச்சி குன்றியோா் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றில் காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி தெற்கு ஒன்றிய தவெக செயலாளா் செந்தில்நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வித்யா, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜா தலைமை வகித்தாா். இதில், முன்னாள் பா்கூா் எம்எல்ஏ கே.இ.கிருஷ்ணமூா்த்தி, தவெக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளா் ரமேஷ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.