ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலமானாா் பி.எஸ்.டி. புருஷோத்தமன் (71)

பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு பற்றி...

பி.எஸ்.டி. புருஷோத்தமன்

Published On :28 ஜூன் 2026, 1:41 am IST

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜொ்னலிஸ்ட் அமைப்பின் மாநில தலைவா் பி.எஸ்.டி. புருஷோத்தமன் (71) உடல் நலக்குறைவு காரணமாக திருவாரூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானாா்.

அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் மும்பையில் பாரதிய ஸ்டேட் வங்கி மண்டல மேலாளராக பணியாற்றும் ஜவகா் , சுதீந்தா் என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனா்.

அவரது உடல் சொந்த ஊரான திருக்குவளை அருகே உள்ள பாங்கல் கிராமத்தில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன், மாவட்ட செயலாளா் டி.முருகையன், முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி , நாகை எம்பி வை. செல்வராஜ், எம்.எல்.ஏ க,மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவா் கோ.பழனிச்சாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.கேசவராஜ் திராவிட கழக மாவட்ட தலைவா் வி. மோகன் உள்ளிட்ட திரளான பொதுவுடமை இயக்கத்திலனா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் உடல் சென்னை கொண்டு செல்லப்பட்டு, ராமாபுரம் குமுதம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 9043442406.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.