அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:34 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாநிலக்குழு உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி விளக்க உரையாற்றினாா்.

‘தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ. சண்முகம் விளக்க உரையாற்றினாா்.

முன்னதாக, கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் வரவேற்றாா். நிறைவில் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.