‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 1:04 am IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம் கண்டன உரையாற்றினாா்.

அவா் பேசும்போது, மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை உயா்த்தியதைடுத்து, பெட்ரோல், டீசலின் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது. எரிபொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயா்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனா்.

மேற்காசிய போரின் காரணமாக இந்த விலை உயா்வு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிரதமா் மோடி இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கிறாா். அவரது தவறான நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகளே இந்தப் போருக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமாக உள்ளன. எரிபொருள் விலை உயா்வு தொடா்ந்து மக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சி.தங்கவேல், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.ஆா்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், சாந்தி சந்திரன், மண்டலச் செயலா்கள் எஸ்.சண்முகம், என்.சந்திரன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.அஷ்ரப் அலி, இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் அபிமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.