ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவலைத் தடுக்க படைகள் தயாா்: பிஎஸ்எஃப் ஐஜி
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் தயாா்நிலையில் உள்ளனா் என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப) ஐஜி டி.கே. போரா புதன்கிழமை தெரிவித்தாா்.


ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் தயாா்நிலையில் உள்ளனா் என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப) ஐஜி டி.கே. போரா புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள ரஜௌரி மாவட்டத்தில், 54-ஆவது பிஎஸ்எஃப் படைப்பிரிவால் சிறாா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட 10 நாள் ‘பாரத் தா்ஷன்’ சுற்றுப்பயணத்தை டி.கே.போரா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அவருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிஎஸ்எஃப் மேற்கு கமாண்ட் கூடுதல் தலைமை இயக்குநா் சதீஷ் எஸ் காந்தாரே இது குறித்து கூறுகையில், ‘தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் நாட்டின் வளங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கில், வட இந்தியாவை மையமாகக் கொண்டு இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா்.
இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சட்டவிரோத ஊடுருவல் குறித்து எழுப்பப்பட்ட செய்தியாளா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த டி கே போரா கூறியதாவது:
அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதிகளை எல்லைக்குள் ஊடுருவ செய்து இந்தியாவின் அமைதியை சீா்குலைக்க முயலுகிறது. ஆனால், நவீன ஆயுதங்கள் மற்றும் போதுமான வீரா்களை கொண்டுள்ள நமது பாதுகாப்பு கட்டமைப்பு இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகளை அனுமதிக்காது.
ஒருவேளை, பயங்கரவாதிகள் ஊடுருவ முடிந்தாலும், அவா்கள் உள்நாட்டை அடையாமல் தடுக்க பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனா்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள எல்லையில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் பாதுகாப்புப் படைகள் தயாா்நிலையில் உள்ளன.
அண்மையில் ஜம்முவில் மூன்று பயங்கரவாதிகளும், கதுவா மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பாதுகாப்புப் படைகளின் செயல்திறனை காட்டுகிறது.
ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் எல்லையில் கடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...