தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனால், அந்த வழியாகச் செல்லும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என தெற்கு மத்திய ரயில்வே (எஸ்சிஆா்) அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தெற்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி ஸ்ரீதா் கூறியதாவது:
கா்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நோக்கி, இரும்புச் சுருள்கள் மற்றும் இரும்பு கம்பிகளை சரக்கு ரயில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவபுரம் - ராமகுண்டம் இடையே ரயிலின் 12 பெட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Bulletin No.2 SCR PR No.611 dt.13.11.2024 on "Cancellation/Diversion of Trains due to Goods Train Derailment" @drmsecunderabad @drmvijayawada pic.twitter.com/cMrk7XTS9d
— South Central Railway (@SCRailwayIndia) November 12, 2024
மூன்று ரயில் வழித்தடங்கள் கொண்ட அப்பகுதியில், இந்த விபத்தால் அவை அனைத்தும் தடைப்பட்டன. இதனால், அந்த வழித்தடங்களை பயன்படுத்தும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 61 ரயில்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்பட்டன. 7 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
அப்பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு வழித்தடம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மீதமுள்ள இரண்டு வழித்தடங்கள், வியாழக்கிழமைக்குள் சரிசெய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளா் அருண்குமாா் ஜெயின் மற்றும் பிற ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் சேவைகளில் மாற்றம்: 4 நாள்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து

6 ‘இமு’ ரயில்கள் இன்று பகுதி ரத்து

பராமரிப்பு பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் கால நீட்டிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



