ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

சந்திரபாபு நாயுடு சகோதரர் ராமமூர்த்தி நாயுடு காலமானார்!

சுவாசக் கோளாறு பிரச்னை இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

சந்திரபாபு நாயுடுவுடன் ராமமூர்த்தி நாயுடு. - Nara Chandrababu Naidu

Published On :

சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பால் காலமானார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவுக்கு (72) உடல்நிலை சரியில்லாததால், 3 நாள்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயம், சுவாசக் கோளாறு பிரச்னை இருந்ததாகவும், அதனால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 16) ராமமூர்த்தி நாயுடுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவர், 1994 முதல் 1999 வரையில் சந்திரகிரி தொகுதியின் தெலுங்குதேச எம்.எல்.ஏ.வாக இருந்தார். நியூயார்க் திரைப்பட அகாதமியின் முன்னாள் மாணவரான ராமமூர்த்தி நாயுடு, நடிகரும் தயாரிப்பாளரும்கூட.

இவருக்கு நாரா ரோஹித், நாரா கிரிஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.