சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டுவர உழைக்கிறது பாஜக!

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

News image

ஜெ.பி. நட்டா - ANI

Updated On :17 நவம்பர் 2024, 5:09 pm IST

பின்தங்கிய பிரிவில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

மேலும் பழங்குடி மக்களுக்கான நிதியை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.

அப்போது மேடையில் அவர் பேசியதாவது,

''ஜார்க்கண்ட் மாநில முன்னேற்றத்துக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ. 80,000 கோடியை ஒதுக்கியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ. 3,00,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத், முத்ரா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேவைக்கு எப்போதுமே முதல் இடம் கொடுக்கிறார் மோடி.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகே மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. ராகுல் காந்தியிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஓபிசி பிரிவில் எத்தனை பேர் ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் உள்ளனர்.

காங்கிரஸ் செயற்குழுவில் ஓபிசி பிரிவினர் எத்தனை பேர் உள்ளனர்? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 27 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் உழைக்கிறது எங்கள் ஆட்சி. பழங்குடி மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 3 மடங்கு அதிகரித்துள்ளார் பிரதமர் மோடி'' எனக் குறிப்பிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.