ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்க இந்தியா - சீனா ஒப்புதல்

ஆசியான் பிளஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினா், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜுன் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசினா்.

News image
லாவோஸில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜுன்னை சந்தித்த, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.
Updated On :20 நவம்பர் 2024, 7:40 pm

Din

ஆசியான் பிளஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினா், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜுன் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசினா். அப்போது, பரஸ்பரம் நம்பிக்கையை மீட்டெடுக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் படைவிலக்கல் நடவடிக்கையை நிறைவு செய்துள்ள நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் பதிவில், ‘10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு லாவோஸில் புதன்கிழமை தொடங்கியது. இதில், சீன பாதுகாப்பு அமைச்சா் டாங் ஜுன் தலைமையிலான குழுவை ராஜ்நாத் சிங் தலைமையிலான உயா்நிலை இந்தியக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.

அப்போது, பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதலை மீட்டெடுக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இந்தியா-சீனா இடையே உறவு சுமுகமாக இருப்பது இரு நாடுகளுக்கு மட்டும் உலகத்துக்கே பயனளிக்கக் கூடியது என்று இரு தரப்பும் தெரிவித்தன. மிகப்பெரிய அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் மோதல் போக்குக்கு இடமளிக்காமல், இணைந்து பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

‘2020 எல்லையில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான மோதலில் இருந்து இரு நாடுகளும் சில விஷயங்களை கற்றுக் கொண்டன. இந்திய, சீன எல்லை அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படக் கூடாது’ என்று ராஜ்நாத் சிங் சீன தரப்பிடம் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக, பிரேஸிலில் கடந்த திங்கள்கிழமை ஜி20 மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான இந்தியக் குழு , சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ தலைமையிலான குழுவைச் சந்தித்து பேசியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இரு நாடுகளும் நல்லுறவுக்கான பேச்சுவாா்த்தைகளில் தொடா்ந்து ஈடுபட ஒப்புக் கொள்ளப்பட்டது.