கார்கே, ராகுல்
கார்கே, ராகுல்

மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: கார்கே, ராகுல் வேண்டுகோள்!

இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துபவர்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கவும்..
Published on

புது தில்லி: மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முதல் கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,

சந்தர்ப்பவாத அரசியல் செய்து, விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துபவர்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கவும், ஜார்க்கண்டில் உள்ள வாக்காளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்

மேலும் சிவாஜி, ஷாகு-புலே-அம்பேத்கர் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மகாராஷ்டிரத்தின் அனைத்து வாக்காளர்களும் அதிகபட்ச எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மகாராஷ்டிராவின் பெருமையையும், மாநிலத்தின் செழிப்பையும், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வளர்ச்சியையும் காப்பாற்றுங்கள். மாநிலத்தில் பணம் மற்றும் பலம் கொண்ட அரசியல் ஒருபோதும் நடக்கவில்லை என்றும் வீழ்ச்சியடைந்த அரசியல் தரம் மகாராஷ்டிரத்தின் சுயமரியாதையை எந்தளவுக்குக் காயப்படுத்தியது என்பதையும் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், முதல் கட்டமாக மக்கள் நலன், நீர், காடு, நிலம் மற்றும் பழங்குடியின நாகரீகத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் வாக்களித்ததாகக் கூறினார்.

இரண்டாம் கட்டத்தில் மக்கள் உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் வெளியே வந்து வாக்களிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மக்களுக்கு தனித்தனியாக வேண்டுகோள் விடுத்தார். மகாராஷ்டிரத்தின் சகோதர சகோதரிகளே, மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மகாவிகாஸ் அகாதிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் உங்கள் வேலைகள் மற்றும் திட்டங்கள் திருடப்படுவதைத் தடுக்கும், விவசாயிகளுக்குப் பயிர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் என்று இந்தியில் அவர் பதிவிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்