மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை 81 இடங்களிலும், அஜீத் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனை (உத்தவ்) 95 வேட்பாளர்களையும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பீப்பள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,
மகாயுதி கூட்டணி 175 - 195
மகாவிகாஸ் அகாடி கூட்டணி 85 - 112
மாட்ரிஸ் (Matrize) நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகள்
மகாயுதி கூட்டணி 150 - 170
மகாவிகாஸ் அகாடி கூட்டணி 110 - 130
மார்க் (marq) நிறுவன கருத்துக் கணிப்பு
மகாயுதி கூட்டணி 137 - 157
மகாவிகாஸ் அகாடி கூட்டணி 126 - 146
சி.என்.என். கருத்துக் கணிப்பு
மகாயுதி கூட்டணி 154+
மகாவிகாஸ் அகாடி கூட்டணி 128+
நியூஸ் 24 - சாணக்யா கருத்துக் கணிப்பு
மகாயுதி கூட்டணி 152 - 160
மகாவிகாஸ் அகாடி கூட்டணி 130 -138
288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருத்துக் க(தி)ணிப்பு என்பது பூவா, தலையா...

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!

அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


