தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதானி முறைகேடு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது குறித்து காங்கிரஸ் கருத்து...

News image
ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி- ANI
Updated On :21 நவம்பர் 2024, 4:57 am

DIN

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் கெளதம் அதானி மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் புதிய பிரச்னை வெடித்துள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த ஜனவரி 2023 முதல் அதானியின் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது.

மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபரை இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.

இதனிடையே, 2020 முதல் 2024 இடையிலான காலகட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை அதானியும் சாகர் அதானியும் பெற்றதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

ரூ. 16,800 கோடி லாபம் ஈட்டக் கூடிய சூரிய ஒளி மின்சார விநியோகத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இந்திய அரசு அதிகாரிகளை அதானியே நேரடியாக சந்தித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பிரதமரின் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மோசடி இது. அதானியின் முறைகேடுகளை விசாரிக்க வெளிநாட்டு அரசு முன்வந்துள்ளது, இந்திய நிறுவனங்கள் பாஜக அரசால் கைப்பற்றப்பட்டிருப்பதை காட்டுகிறது.

அதானியின் மிகப்பெரிய ஊழலை விசாரிக்க நம்பகத்தன்மை கொண்ட புதிய செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. மேலும், முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.