எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

பாஜக செயலரின் பதிவுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதரவு
டாக்டர் எஸ்.ஜி. சூர்யா - எம்.பி. சு. வெங்கேடசன்
டாக்டர் எஸ்.ஜி. சூர்யா - எம்.பி. சு. வெங்கேடசன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததை விமர்சித்து தமிழக பாஜக செயலாளர் பதிலளித்துள்ளார்.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை குற்றஞ்சாட்டியதுடன் தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கோரிக்கை விடுத்து மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி எம்.பி. வெங்கடேசன் எழுதிய கடிதம்
தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி எம்.பி. வெங்கடேசன் எழுதிய கடிதம்

இந்த நிலையில், பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு நடத்தவில்லை என்றும், தமிழகம்தவிர வேறுசில மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா பதிலளித்துள்ளார்.

டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உத்தரப் பிரதேசத்தில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது.

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதிகளை முடிவு செய்வது மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ இல்லை. தன்னாட்சி பெற்ற இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) எனும் அமைப்புதான் தேர்வை முடிவு செய்யும். தேர்வு தேதியை முடிவு செய்வதற்கு ஐசிஏஐ-க்கு சில நெறிமுறைகளும் உண்டு. அதனைக் கருத்தில் கொண்டுதான் தேர்வு தேதிகளை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக செயலரின் பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கு கருத்தும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com