பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கீழடி, மெட்ரோ, ரயில் திட்டங்கள் இல்லை! தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டவே இந்த பட்ஜெட்! - சு. வெங்கடேசன்

2026- 27 மத்திய பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து...

CPIM MP Su. Venkatesan comments on 2026-27 Union Budget

சு. வெங்கடேசன்

Published On :

தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டுவதற்குதான் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 7 நகரங்களில் அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சுற்றுலா சார்ந்து சில அறிவிப்புகள் வெளியாகின. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

மாறாக, கனிம வளங்கள் அதிகம் உள்ள ஒடிசா, கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய தனிச் சிறப்புப் பொருளாதாரப் பாதைகள் (Rare-earth corridors) உருவாக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து பட்ஜெட் குறித்து சு.வெங்கடேசன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளிலேயே இது மிகவும் மோசமான பட்ஜெட். இந்த முறை பட்ஜெட்டில் திருக்குறள், சங்க இலக்கியம்கூட இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு ஏன் மத்திய அரசுக்கு ஞாபகம் வர மறுக்கிறது?

மாறாக, தமிழ்நாட்டின் கனிம வளங்களை சூறையாடவே பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கனிம வளங்களை ஏலம்விட மாநில அரசிடம் இருந்த அதிகாரத்தைப் பறித்துள்ளது மத்திய அரசு.

இப்போது தமிழ்நாட்டிற்கு வளங்களை அறிவிக்காமல் இங்குள்ள வளங்களைச் சுரண்டவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவம் சார்ந்து 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சித்த மருத்துவம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதுபோல அகழாய்வு குறித்த அறிவிப்பில் கீழடி இடம்பெறவில்லை.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் இல்லை. அனைத்து வகையிலும் வஞ்சகத்தை இழைத்திருக்கிற ஒரு பட்ஜெட்டாகவே இது இருக்கிறது.

மக்களுக்கு நல்லது செய்து வாக்குகளை பெற வேண்டும் என்று நேர்மறையான முறையில் அவர்கள் ஈடுபடவில்லை.

புதிய கட்டமைப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை" என்று தெரிவித்தார்.

Summary

CPIM MP Su. Venkatesan comments on 2026-27 Union Budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.