யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஏழைகளுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

News image
பிரதமர் மோடி- பிடிஐ
Updated On :1 பிப்ரவரி 2026, 2:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தரில் குரு ரவிதாஸி ஜெயந்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதாய் இருக்கும்.

பஞ்சாபில் பிரதமர் மோடி

பஞ்சாபில் பிரதமர் மோடி

இது கிராமங்களை வலுப்படுத்தும் பட்ஜெட். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கை இந்தியா மற்றும் சுதேசி இந்தியாவை (Make in India - மேக் இன் இந்தியா) ஊக்குவிக்கும் பட்ஜெட் என்று தெரிவித்தார்.

முன்னதாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி, மூலதனத்தை இழந்துவரும் முதலீட்டாளர்கள், சரிந்து வரும் வீட்டு சேமிப்பு, விவசாயிகளின் நிலைமை, உலகளாவிய அதிர்ச்சி நிலைமை ஆகிய அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.