தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு

Published On :

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட பணிகளிலும் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன்கீழ் வெளியிடப்பட்ட இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: 40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிவது அவசியமானது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பிரத்யேகமாக குழு அமைத்து, கண்டறியப்பட்ட பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகள் சாா்பில் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு கண்டறியப்பட்ட பணிகள் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு மம் பணிகளுக்கான தேவைகளை அறிந்துகொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாா்வையற்றோா், செவித்திறன் அற்றோா், அறிவுசாா் குறைபாடுகள் போன்ற பிரிவுகளில் உள்ளோருக்கு நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பின்னடைவு காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்புதல் மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான மூன்று ஆண்டு கால அவகாசம் முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதுதொடா்பாக கடந்த 2021 மற்றும் 2022-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதுதொடா்பான வழக்கு விசாரணையின்போது தில்லி உயா்நீதிமன்றம் கூறுகையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ஐ அமல்படுத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா சங்கத்தான் போன்ற நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகளை அதிகாரபூா்வமற்ற முறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அனைத்துத் துறைகளும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது இந்த நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.