நிகா்நிலை பல்கலை. அந்தஸ்து தொடா்பான விதிகளை எதிா்த்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் பல்கலை. மானியக் குழு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை., சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நிகா்நிலைப் பல்கலை. அந்தஸ்து வழங்குவது தொடா்பாக பல்கலை. மானியக்குழு 2023-ஆம் ஆண்டு விதிகளை வகுத்தது. அதன்படி, நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், எந்த பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளதோ, அந்த பல்கலைக்கழகத்தின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
60 நாள்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேபம் இல்லை என கருதி, நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கோரி மருத்துவக் கல்வி நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை. மானியக் குழுவின் இந்த விதிகளால், மாநில அரசின் கலந்தாய்வு, இடஒதுக்கீடு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விதிகளை அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் பல்கலை. மானியக்குழு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணையாறு வழக்கில் மத்திய அரசின் புதிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக, கா்நாடக அரசுகளுக்கு அவகாசம்: உச்சநீதிமன்றம்

என்ஐஏ சட்டத்துக்கு எதிரான மனு: 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பொறுமையை பலவீனமாக எண்ண வேண்டாம்: ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஒமா் அப்துல்லா ஆவேசம்





