பாலத்திலிருந்து கார் விழுந்து 3 பேர் பலியான விபத்து: கூகுள் மேப்ஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!

கூகுள் மேப்ஸை பின்பற்றிச் சென்றதால் இடிந்த பாலத்திலிருந்து கீழே விழுந்து 3 பேரும் பலியாகினர்.
இடிந்த பாலத்திலிருந்து கீழே விழுந்த கார்.
இடிந்த பாலத்திலிருந்து கீழே விழுந்த கார்.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் பலியான விபத்தில் கூகுள் மேப்ஸ் அதிகாரி உள்பட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் குருகிராம் மாவட்டத்தில் இருந்து பரேலி நோக்கி சனிக்கிழமை (நவ. 23) இரவு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மூன்று இளைஞர்கள் கூகுள் மேப்பை பின்பற்றி காரில் சென்றுள்ளனர்.

அப்போது, ராம்கங்கா ஆற்றுக்கு குறுக்கே சேதமடைந்த மேம்பாலத்தில் வழி இருப்பதாக கூகுள் மேப்பில் காட்டியதால், வேகத்தை குறைக்காமல் முன்னோக்கிச் சென்ற இளைஞர்கள் பாலத்தில் இருந்து விழுந்து பலியாகினர்.

இந்த நிலையில், கூகுள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடாத சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கூகுள் மேப்ஸின் பிராந்திய அதிகாரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அந்தப் பாலத்தில் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகளை ஆய்வு செய்யவும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர், ”பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்னை குறித்து விசாரிக்க எங்களது ஆதரவை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com