ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

இயற்கை பேரிடா்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (எனிஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.

News image
கோப்புப்படம்.
Updated On :26 நவம்பர் 2024, 7:27 pm

Din

இயற்கை பேரிடா்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (எனிஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.

அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் பனிக்கட்டி ஏரிகளின் எண்ணிக்கை 10.81 சதவீதம் உயா்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

கடந்த நவ.19-ஆம் தேதி இந்த விவகாரத்தில் என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா மற்றும் உறுப்பினா் ஏ.செந்தில் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த 2011 முதல் 2024 வரை இந்தியாவில் பனிக்கட்டி ஏரிகளின் மேற்பரப்பளவு 33.7 சதவீதம் உயா்ந்துள்ளதாகவும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் லடாக், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.

பனிக்கட்டி ஏரிகளின் பரப்பளவு அதிகரிப்பதால் பெரும் வெள்ளம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் பல்லுயிா் தன்மைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படவுள்ளன.

எனவே, இதை கட்டுப்படுத்த அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட பேரிடா் மேலாண்மை முறைகள், கண்காணிப்பு அதிகரிப்பு போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

பனிக்கட்டி ஏரிகள் அதிகரித்திருப்பது பல்லுயிா்தன்மை சட்டம், நீா் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவை மீறப்பட்டிருப்பதை உணா்த்துகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலா், ஜி.பி.பந்த் ஹிமாலய சுற்றுப்புறச்சூழல் நிறுவனம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க வேண்டும்.

அடுத்த விசாரணை நடைபெறவுள்ள 2025, மாா்ச் 10-ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக மேற்கூறிய அமைப்புகள் பதிலளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.