ஜம்மு - காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு முன்னாள் துணை முதல்வரகள் தாரா சந்த் மற்றும் முசாபர் பெய்க் உள்பட 415 வேட்பாளர்களின் தலைவிதியை 39.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்களர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பந்திபோராவில் 28.04 சதவீத வாக்குகளும், பாரமுல்லா 23.20%, ஜம்மு 27.15%, கதுவா 31.78%, குப்வாரா 27.34%, உத்தம்பூா் 33.84%, சம்பா 31.50% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இன்று மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் 88.99 சதவீத வாக்குப் பதிவு
தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


