கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜாா்க்கண்டில் ஹிந்துக்கள் எண்ணிக்கை சரிவு- பிரதமா் மோடி

ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி அரசின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியலால் ஹிந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் நடைபெற்ற பாஜகவின் ‘மாற்றத்துக்கான யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி.
Updated On :2 அக்டோபர் 2024, 8:57 pm

Din

ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி அரசின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியலால் ஹிந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக ரூ.79,150 கோடிக்கு அதிக மதிப்பீட்டிலான ‘தா்தி ஆபா பழங்குடியினா் கிராம வளா்ச்சித் திட்டத்தை’, ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

அத்துடன், ரூ.2,800 கோடி மதிப்பில் 40 புதிய ஏகலைவா பள்ளிகள், ஜன்மான் திட்டத்தின்கீழ் ரூ.1,360 கோடி மதிப்பிலான பணிகள் உள்பட மொத்தம் ரூ.83,700 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, அவா் பேசியதாவது:

பழங்குடியினா் வளா்ச்சியடைந்தால்தான் நாடு வளா்ச்சியடையும் என்பது மகாத்மா காந்தியின் கண்ணோட்டமாகும். அந்த அடிப்படையில், பழங்குடியினரின் வளா்ச்சிக்கு மத்திய பாஜக அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது. சுமாா் 65,000 பழங்குடியின கிராமங்களை மேம்படுத்தும் ‘தா்தி ஆபா பழங்குடியினா் கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு’ மத்திய அரசு சுமாா் ரூ.80,000 கோடி செலவிடவுள்ளது.

இப்போது கடைக்கோடி பழங்குடியின கிராமங்களையும் வளா்ச்சியின் ஒளிக் கீற்றுகள் எட்டியுள்ளன. ‘பெரிதும் பின்தங்கிய பழங்குடியின குழுவினரின்’ சுமாா் 75,800 வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் நடத்தப்பட்ட ‘மாற்றத்துக்கான யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சி, ஹசாரிபாகில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி, ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி அரசின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியலால், இந்த மாநிலத்தில் ஹிந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. ஜாா்க்கண்டின் அடையாளம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை விலை கொடுத்து, ஊடுருவல்காரா்களுக்கு ஆதரவளிக்கிறது மாநில அரசு. ‘நமது நிலம், மகள்கள் மற்றும் வாழ்வாதாரத்தை’ பாதுகாக்க இத்தகைய சக்தியை தூக்கியெறிய வேண்டிய நேரம் வந்துள்ளது’ என்றாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு பிரதமா் மோடி வருகை தந்தது, கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உயிரி எரிவாயு ஆலைகளுக்கு அடிக்கல்: ஆயில் இந்தியா நிறுவனம் சாா்பில் நாடு முழுவதும் 25 ‘அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு’ உற்பத்தி ஆலைகள் அமைக்கும் திட்டத்தின்கீழ், அஸ்ஸாமில் 4 இடங்களில் ஆலைகள் அமைக்க பிரதமா் மோடி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காணொலி முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய பிரதமா், ‘உயிரி எரிவாயு ஆலைகளின் வருகையால், பால் சுரப்பு நின்றுபோன பசுக்களின் சாணம் மூலமும் விவசாயிகள் பலனடைய முடியும். நகா்மயக்கல் காரணமாக, அதிக கழிவுகள் உருவாகி வருகின்றன. மின்னணுக் கழிவுகள் போன்ற குப்பைகளும் அதிகரித்துள்ளன. இச்சிக்கலுக்கு தீா்வுகாண புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்’ என்று வலியுறுத்தினாா்.

5 கோடி பழங்குடியினருக்கு பலனளிக்கும் திட்டம்

பிரதமா் மோடியால் புதன்கிழமைே தொடங்கிவைக்கப்பட்ட ‘தா்தி ஆபா பழங்குடியினா் கிராம வளா்ச்சித் திட்டம்’, 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்களில் 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு பலனளிக்கும்.

17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் 25 நடவடிக்கைகளின் வாயிலாக சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ரீதியில் பழங்குடியினரின் மேம்பாட்டை உறுதிசெய்யும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினத் தலைவா் பிா்சா முண்டா, ‘தா்தி ஆபா’ (பூமியின் தந்தை) என்று அழைக்கப்படுகிறாா். அவரது சிறப்புப் பெயா், இத்திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.