புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அரசை விமா்சித்ததற்காக இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குக் கூடாது: உச்சநீதிமன்றம்

அரசை விமா்சித்து எழுதியதாகக் கருதி இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 7:10 pm

அரசை விமா்சித்து எழுதியதாகக் கருதி இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவைச் சோ்ந்தவா் இதழியலாளா் அபிஷேக் உபாத்யாய. இவா் அந்த மாநில அரசுப் பணிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், ஜாதி அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிா என்று கேள்வி எழுப்பியும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். இதையடுத்து அவா் மீது லக்னெள காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அபிஷேக் உபாத்யாய மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசை விமா்சித்து எழுதியதாகக் கருதி இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது. ஜனநாயக நாட்டில் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒருவரின் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அத்துடன் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ், இதழியலாளா்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து மனு தொடா்பாக பதிலளிக்க உத்தர பிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். அதுவரை அபிஷேக் உபாத்யாவுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.