மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதிய இல்லத்துக்குக் குடிபெயர்ந்தார் கேஜரிவால்!

அரசு இல்லத்தைக் காலி செய்த கேஜரிவால் புதிய இல்லத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார்.

News image

பழைய இல்லத்தைக் காலி செய்த அரவிந்த் கேஜரிவால்

Updated On :4 அக்டோபர் 2024, 6:16 am

தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசு இல்லத்தைக் காலி செய்து, புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளார்.

அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருந்தபோது அவருக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் புதிய இல்லத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர தேடுதலுக்குப் பின்னர், இன்று அரசு இல்லத்தை காலி செய்து புதிய முகவரிக்குச் சென்றுள்ளார்.

ரவிசங்கர் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள பஞ்சாப் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்துடன் குடியேறி உள்ளார்.

மக்களவைத் தேர்தல்..

அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்களிடம் நேர்மைக்கான சான்றிதழைப் பெற்ற பின்னரே மீண்டும் முதல்வர் பதவியை வகிப்பதாகக் கூறி கடந்த மாதம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் கேஜரிவால்.

நவராத்திரி காலத்தில் முதல்வர் இல்லத்தைக் காலி செய்வதாக அவர் முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நவராத்திரி திருவிழா தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று புதிய இல்லத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார்.

சிறைக்குச் சென்றதன் பின்னணி

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கேஜரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின்னர், 155 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் செப்டம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதன்பின்னர் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.