காங்கிரஸ் கொள்கைகளை மக்கள் ஏற்பார்கள்: ப.சிதம்பரம்
காங்கிரஸ் கொள்கைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.


மக்களால் காங்கிரஸ் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று (அக். 7) தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணாவில் நாளை (அக். 8) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி ப.சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ப. சிதம்பரம் பேசியதாவது,
காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலமாக நிறுவப்பட்ட கொள்கைகளை மக்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குறுகிய காலத்தில் வேறு கொள்கையும் சித்தாந்தமும் ஆக்கிரமித்தது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் காங்கிரஸினுடையது. ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இதனை மெய்ப்பிக்கும் எனத் தெரிவித்தார்.
சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தில் உடல்நிலை பதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிக்க | உணவு விநியோகம் செய்த ஸொமாட்டோ சிஇஓ: காத்திருந்த அதிர்ச்சி!
அதற்கு பதிலளித்த அவர், இது சற்றும் எதிர்பாராத சம்பவம். விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
நாளை வாக்கு எண்ணிக்கை
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தோ்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...