கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

ராகுல் காந்தி, ஒமர் அப்துல்லா - கோப்புப்படம்

Published On :

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

“அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கும் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி.

மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த மாநிலத்தின் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுப்பதற்கான மக்களின் முடிவு. ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையை விதைக்கு தருணம் தொடங்கியுள்ளது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.