ஹரியாணா தோ்தல் வெற்றி: பிரதமா், பாஜக மூத்த தலைவா்களுடன் முதல்வா் நாயப் சிங் சைனி சந்திப்பு
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மூத்த தலைவா்களை மாநில முதல்வா் நாயப் சிங் சைனி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பிரதமா் நரேந்திர மோடி,யை தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி.









