அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உடல்நிலை மோசம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ரத்தன் டாடா?

உடல்நிலை மோசமடைந்துள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

News image
ரத்தன் டாடா- கோப்புப் படம்
Updated On :9 அக்டோபர் 2024, 2:50 pm

DIN

உடல்நிலை மோசமடைந்துள்ளதால், தொழிலதிபர் ரத்தன் டாடா (86) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, வழக்கமான பரிசோதனைக்காகச் சென்றதாக ரத்தன் டாடா அறிக்கை மூலம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முக்கியமானத் தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ரத்தன் டாடா. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவரின் தலைமையில், 1991 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய நிறுவனமாக டாடா உயர்ந்தது.

மருத்துவமனையில் ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு தகவல்கள் பரவின.

ஆனால், இதற்கு டாடா மறுப்பு தெரிவித்திருந்தார். வயது மூப்பு மற்றும் அது தொடர்பான பிரச்னைகளுக்காக வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனைக்குச் சென்றதாகவும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ரத்தன் டாடா உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.