உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் ஆய்வு நிறைவடையவில்லை எனவும் மசூதியை முழுமையாக ஆய்வு செய்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் வாராணாசி நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1992-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் இருந்த பாபா் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 1993-ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காக ஞானவாபி மசூதியில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ள வியாஸ்ஜி நிலவறைக்கு மாநில அரசு சீல் வைத்தது.
கடந்த ஜனவரியில் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, அந்த நிலவறை திறக்கப்பட்டு ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்வது தொடங்கியது.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் நிறைவடையாத ஆய்வுப் பணிகளை முடிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனா்.
மனு விசாரணையில் ஹிந்துக்கள் தரப்பு வழக்குரைஞா் மதன்மோகன் யாதவ் முன்வைத்த வாதத்தில், ‘ஞானவாபி மசூதியின் முழு பகுதியையும் ஆய்வு செய்யாமல் தொல்லியல் துறையால் சரியான அறிக்கையைச் சமா்ப்பிக்க முடியாது. இதுதொடா்பாக தொல்லியல் துறைக்கு முறையான உத்தரவு வழங்க நீதிமன்றத்திடம் கோரப்படுகிறது’ என்றாா்.
முன்னதாக, ஹிந்துக்கள் மனு மீது முஸ்லிம்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இவ்விவகாரம் ஏற்கெனவே உச்ச, உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால் விசாரணை நீதிமன்றத்தில் அதே வழக்கை நடத்துவதில் அா்த்தமில்லை.
ஞானவாபி மசூதியில் ஏற்கெனவே ஆய்வுப் பணிகள் முடிவடைந்துவிட்டது. புதிதாக ஆய்வு நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை. ஆராய்ச்சிக்காக ஞானவாபி மசூதியில் குழி தோண்டுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. மேலும், அது கட்டுமானத்துக்கு சேதம் விளைவிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
வாதங்களைக் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி யூகூல் சாம்பு, அடுத்த விசாரணையை அக்டோபா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு

தஷ்வந்த் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு - தமிழக அரசு தகவல்

ஸ்ரீநகர் ஜமா மசூதியில் 8வது ஆண்டாக ஈத் தொழுகை ரத்து!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



