ஹரியாணா தோ்தலில் அதிா்ச்சி தோல்வி: ஆய்வுக் குழுவை அமைக்க காங். முடிவு!


ஹரியாணா தோ்தலில் எதிா்பாராத விதமாக தோல்வியடைந்ததையடுத்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் வியாழக்கிழமை சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தோ்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை கண்டறிய ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தில்லியில் உள்ள மல்லிகாா்ஜு காா்கே இல்லத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ஹரியாணா தோ்தலுக்கான காங்கிரஸ் பாா்வையாளா்கள் அசோக் கெலாட் மற்றும் அஜய் மாக்கன், அந்த மாநிலத்துக்கான கட்சியின் பொதுச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஜய் மாக்கன் கூறியதாவது: வாக்கு கணிப்பில் வெளியிடப்பட்ட முடிவுகளுக்கும் தோ்தல் முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்.
தோ்தல் ஆணைய செயல்பாடு, உள்கட்சி பூசல்கள் உள்பட பல்வேறு விவாகாரங்கள் குறித்து ஆலோசித்தோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹரியாணா தோ்தல் முடிவுகள் குறித்து ஆராய ஆய்வுக் குழு ஒன்றை ஏற்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்தக் குழு தோ்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளா்கள் மற்றும் பிற நிா்வாகிகளுடன் கலந்துரையாடவுள்ளது. மேலும், தொகுதி வாரியாக பெறப்பட்ட புகாா்கள் குறித்தும் அந்தக் குழு பரிசீலனை செய்யவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகாா் மனு அளித்தது. இதைத்தொடா்ந்து, தற்போது இந்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...