மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஹரியாணா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது: அசோக் கெலாட்

ஹரியாணா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

News image
அசோக் கெலாட்
Updated On :11 அக்டோபர் 2024, 12:32 pm

DIN

ஹரியாணா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது, ஹரியாணா பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பாராததாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாகவும் அமைந்தது. இதுதொடர்பாக ஆலோசிக்க கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கட்சியின் மறுஆய்வுக்குப் பிறகுதான் உண்மையான காரணங்கள் தெரியவரும். ஹரியாணா தேர்தல் முடிவுகளின் தாக்கம் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் எதிரொலிக்காது என்றார்.

ராஜஸ்தானில் முன்னாள் காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுகளை தற்போதைய பாஜக அரசு மறுபரிசீலனை செய்வது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் எங்கள் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்.

இதுபோன்ற திட்டங்களை நிறுத்துவதன் மூலம், அவர்கள் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். எனவே அவற்றை நிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ஹரியாணா சட்டப் பேரவைக்கு கடந்த 5-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

அதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.