அக்னிவீர் பயிற்சியில் வீரர்கள் உயிரிழப்பு: ராணுவத்தில் பாரபட்சம் ஏன்? -ராகுல் காந்தி கேள்வி

20 வயது இளைஞர் கோஹில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது சைஃபத் ஷித் உயிரிழப்பு...
உயிரிழந்த கோஹில் விஸ்வராஜ் சிங், சைஃபத் ஷித்
உயிரிழந்த கோஹில் விஸ்வராஜ் சிங், சைஃபத் ஷித்PTI
Published on
Updated on
1 min read

அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த, ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் கோஹில் விஸ்வராஜ் சிங், மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் சைஃபத் ஷித் ஆகிய இருவரும், நாஷிக் நகரில் கடந்த வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வீசப்பட்ட குண்டுகள் எதிர்பாராத விதமாக இவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே விழுந்து வெடித்ததில் உயிரிழந்தனர்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

அக்னிவீர் திட்டத்துக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிரது. இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டுமென ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கோஹில் விஸ்வராஜ் சிங் மற்றும் சைஃபத் ஷித் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், அக்னிவீர் திட்டம் குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.

“வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் பாஜக அரசு இவற்றுக்கான விடையளிப்பதில் தோல்வியடைந்துள்ளது.

-மறைந்த கோஹில் மற்றும் சைஃபத் ஷித் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படுமா? அதிலும், ராணுவத்தில் சேவையாற்றி வீரமரணமடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதை போலவே இவர்களுக்கும் சரிசமமான இழப்பீடு வழங்கப்படுமா?

-அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் உள்பட அரசு சலுகைகள் ஏன் கிடைப்பதில்லை?உயிரிழந்த இந்த இவ்விரு வீரர்களின் கடமையும் தியாகமும் பிற வீரர்களின் தியாகத்துக்கு ஒப்பானது, அப்படியிருக்கும்போது, இத்தகைய பாகுபாடு ஏன் காட்டப்படுகிறது?

அக்னிபத் திட்டம் என்பது ராணுவத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, வீரமரணமடைந்த துணிச்சலான நம் வீரர்களை அவமதிக்கும் நடைமுறை. இந்த நிலையில், ஒரு வீரரின் உயிர் இன்னொரு வீரரைவிட மதிப்புமிக்கதாகக் கருதப்படுவது ஏன்? என்பதற்கு பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும்.

இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்போம்.”

பாஜக அரசின் ‘அக்னிவீர்’ திட்டத்தை நீக்கிடவும், நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் காங்கிரஸின் ‘ஜெய் ஜவான்’ இயக்கத்தில் இணைந்திட ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com