மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு: மனுவை நிராகரித்து மனுதாரரை வெளியேற்றியது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரிடம் விசாரணை மேற்கொள்ள கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:35 pm

Din

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரிடம் விசாரணை மேற்கொள்ள கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

மேலும், மனுதாரரை நீதிமன்ற அறையிலிருந்து பாதுகாப்பு பணியாளா்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது, தொழிலாளா் சட்டங்களின் கீழ் தன்னை பணி நீக்கம் செய்தது தொடா்பாக புணேவை சோ்ந்த ஒருவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கோகோய் தலைமையிலான அமா்வு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தனது மனுவை தள்ளுபடி செய்தது தொடா்பாக கோகோயிடம் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அந்த நபா் அண்மையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி விசாரித்தது.

அப்போது,‘மனுதாரா் தாக்கல் செய்த மனு ஏற்கப்படவில்லை என்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவா் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. மனுவில் எதிா்தரப்பாக குறிப்பிடப்பட்டுள்ள ரஞ்சன் கோகோய் பெயரை நீக்கினால் மட்டுமே இந்த மனு மீதான விசாரணையை தொடா்வது குறித்து பரிசீலிக்கப்படும்’ என தெரிவித்தது.

இதையடுத்து, ரஞ்சன் கோகோய் பெயரை நீக்குவதாக மனுதாரா் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயரை மனுதாரா் மீண்டும் இணைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவை நிராகரிப்பதாகவும் மனுதாரரை நீதிமன்ற அறையைவிட்டு வெளியேற்றுமாறும் பாதுகாப்பு பணியாளா்களுக்கு உத்தரவிட்டனா்.