/

தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? - ப.சிதம்பரம்

தகவல் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி.

News image
ப.சிதம்பரம்
Updated On :15 அக்டோபர் 2024, 11:08 am

DIN

தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில், தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.

தற்போது, ​​ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். 8 தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏன்?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும்பொருட்டு மத்திய அரசு, இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து தகவல் ஆணையர்களின் பணி நிலைமை குறித்த விதிகளை மாற்றியுள்ளது.

தகவல் ஆணையர்களை நியமிக்காததுதான் இந்த சட்டத்திற்கு மரண அடியை ஏற்படுத்துவதற்கான வழி" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.