

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அஸ்ஸாமில் குவஹாட்டி நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமையில் (அக். 18) காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தீப் சிங், மனோஜ் தேகா என்ற இருவரிடம் சோதனை நடத்தியதில் கடத்தல் செய்யப்படவிருந்த போதைப்பொருள் சிக்கியது.
10 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டு, கடத்தப்பட்ட 601 கிராம் அளவிலான போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 5.5 கோடிக்கும்மேல் இருக்கும் என்றும் தெரிகிறது.
கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இந்த கடத்தல் தொடர்பான விசாரணை நடப்பதாகவும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.